Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாமகவுக்கு 10 சீட்…… பாஜக கூட்டணி ஏன்? அன்புமணி பேட்டி

பாமக  நிர்வாகிகள் கூட்டம் நேற்று  தைலாபுரத்தில் நடந்தது. இதில்  பாமகவுடன் கூட்டணி சேர முடிவு செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் தைலாபுரம் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.   அதன்படி பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

.கூட்டணி முடிவான பிறகு செய்தியாளர்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஆழமாக உள்ளது. எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி 3 வது முறையாக இந்தியாவின் பிரதமராக தேர்வு செய்யப்படுவார்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!