Skip to content
Home » பாஜக கூட்டணியில் பாமக இணைகிறது……8 பிளஸ்1ல் ஒப்பந்தம் ?

பாஜக கூட்டணியில் பாமக இணைகிறது……8 பிளஸ்1ல் ஒப்பந்தம் ?

 பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். பேச்சுவார்த்தை நடத்தினர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் நள்ளிரவில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜகவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது ஓ.பி.எஸ்.ஸுடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனும் உடன் இருந்தனர்.

அதேபோல் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 8 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்க பாஜக முடிவு  செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கான ஒப்பந்தம் இன்று அல்லது நாளை இறுதி செய்யப்படும். அதன் பின்னர் தேமுதிகவையும் தங்கள் பக்கம் கொண்டு வர பாஜக சில திட்டங்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜகைவ பொறுத்தவரை இந்த  தேர்தலில் அதிமுகவை தனித்து விட வேண்டும். அத்துடன் அந்த கட்சியை விட  பாஜக அணி கூடுதல் வாக்கு வாங்கி காட்ட வேண்டும் என்ற ஒரு அம்ச திட்டத்துடன் செயல்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!