Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.பி.க்களை தன் பக்கம் இழுத்த பாஜக

ஆம் ஆத்மி கட்சியின் 10 மாநிலங்களவை எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் கட்சியிலிருந்து முறைப்படி விலகிவிட்டதாக எம்.பி. ராகவ் சதா உறுதிப்படுத்தியுள்ளார். இன்று காலை மாநிலங்களவைத் தலைவரிடம் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டதாக சதா கூறினார். சதா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோருடன் எம்.பி.க்கள் ஹர்பஜன் சிங், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சஹ்னி மற்றும் சுவாதி மாலிவால் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளதாக ராகவ் கூறுகிறார். இவர்கள் பாஜகவில் இணைய உள்ளனர்.  அனைவரும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிலையில் பாஜகவில் போய் அப்படியே சேருகிறார்கள். 

இந்நிலையில் ஆட்சிகளையும் கட்சிகளையும் கலைக்கும் ஆபரேஷன் தாமரையை பஞ்சாப் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடங்கிவிட்டது என ஆம் ஆத்மி கட்சி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்யசபா எம்.பி ராகவ் சத்தா, “ஆம் ஆத்மி கட்சி தேச நலனுக்காக உழைக்கவில்லை, தனிப்பட்ட ஆதாயங்களுக்காக உழைக்கிறது. சமீப காலமாக ஒரு சரியான மனிதன் தவறான கட்சியில் இருப்பதாக நான் உணர்ந்தேன். ராஜ்யசபாவில் உள்ள ஆம் ஆத்மி எம்.பிக்களில் மூன்றில் 2 பங்கு எம்.பிக்கள் பாஜகவில் இணையவுள்ளனர்” என்றார்.

error: Content is protected !!