Skip to content

அடையாளம் தெரியாத 35 வயது ஆண் சடலம் மீட்பு… புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அரசமலைகிராமம் எடையன் பாறை அருகில் அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். வயது சுமார் 35 இருக்கும். விசாரணையில் மேற்படி நபர் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது.
இச்சம்பவம் தொடர்பாக காரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

error: Content is protected !!