Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி சிறை நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை….சவுந்திரபாண்டியன் எம்எல்ஏ வழங்கினார்

திருச்சி மத்திய சிறையில்  நூலகம் செயல்பட்டு வருகிறது.  இங்குள்ள சிறை வாசிகள் ஓய்வு நேரத்தில்   புத்தகங்கள் படிக்கும் வகையில், அறிவியல், ஆன்மிகம் ,   பொருளாதாரம், சமூகம் தமிழ் வரலாறு, இலக்கியங்கள் என பல்துறை சார்ந்த புத்தகங்கள்  அங்கு வைக்கப்பட்டு உள்ளன.

சிறைவாசிகள் சிலர் தேர்வு எழுகிறார்கள். இவர்களுக்கு தேவையான புத்தகங்களும் அங்குள்ள நூலகத்தில் கிடைக்கிறது.  சிறைவாசிகளுக்கு தேவையான நூல்களை திருச்சி சிறைத்துறை டிஐஜி  ஜெயபாரதி சேகரித்து வைத்துள்ளார்.

இந்த நிலையில்  லால்குடி திமுக எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியன் நேற்று ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 327 புத்தகங்களை திருச்சி சரக சிறைத்துறை  டிஐஜி ஜெயபாரதியிடம்  வழங்கினார். எம்.எல்.ஏவுக்கு  ஜெயபாரதி நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!