Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போட்டோவை மார்பிங் செய்வதாக காதலியை மிரட்டிய காதலன் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், திருப்பத்துாரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும்,கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துார் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் கிருஷ்ணன்(28). கார் டிரைவர். என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு காதலாக மாறியது.

இந்நிலையில் கிருஷ்ணனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த இளம் பெண் அவரை விட்டு பிரிந்தார். ஆனால் கிருஷ்ணன் தொடர்ந்து இளம் பெண்ணுக்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் இளம் பெண்ணின் படத்தை மார்ப்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இது குறித்து திருப்பத்துார் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர்.

error: Content is protected !!