Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலி கண்முன்னே காதலன் குத்திக் கொலை-சோகம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சஞ்சய்(19). இவர் சென்னையில் சிலைகள் செய்யும் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். இவரும், கழுகுமலை அருகேயுள்ள கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி குமார்(44) என்பவரின்  மகள் கனகலெட்சுமி காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த குமார்,  இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 17ந்தேதி இரவு சஞ்சய் தனது நண்பர்களான முத்துச்செல்வம், மாதேஷ் ஆகியோருடன்  வேலைக்காக சென்னை புறப்பட்டார். இதற்காக அவர்கள் 3 பேரும் கரடிகுளத்தில் இருந்து கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள கூடுதல் பஸ் ஸ்டாண்ட் முன்பு பஸ்ஸுக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு  வந்த குமார் அவரது உறவினர்கள் மாரிமுத்து, சங்கரநாராயணன் மற்றும் கனகலெட்சுமி ஆகியோர் அங்கு வந்துள்ளனர். 

பெண்ணின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்கள் சஞ்சய் உடன் வாக்குவாதத்தில்  ஈடுபட்டது மட்டுமின்றி கத்தியால் குத்தி சஞ்சய் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் குமார், அவரது உறவினர்கள் மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். காதலி முன்பு காதலன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்  தற்போது சஞ்சய் கொலை செய்யப்படக்கூடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!