முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் நடைபெற்ற சங்கத்தின் மாநாட்டில் அதன் மாநிலத் தலைவர் நாராயணன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதுவரை எந்தவொரு சாதிய அமைப்பும் நேரடியாகத் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில், முதல்முறையாகப் பிராமணர் சங்கம் தனது ஆதரவை பகிரங்கமாகத் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
தவெகவிற்கு முழு ஆதரவு அளிப்பதாகப் பிராமணர் சங்கம் அறிவிப்பு
