பிரபல ‘பிரேக்கிங் பேட்’ தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகர் RJ.மிட் நேற்று (அக்.12) காலமானார். இந்நிலையில், அத்தொடரில் அவருக்கு தந்தையாக நடித்த நடிகர் பிரையன் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்புதான் இருவரும் சந்திப்பது குறித்து பேசிக்கொண்டதாகவும், அந்த சந்திப்பு அவரது எதிர்காலத்தை மாற்றியிருக்குமா என்பது தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். மேலும், தான் அவரை மிகவும் நேசித்தேன் என்பது மட்டும் தனக்கு நன்றாக தெரியும் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
பிரேக்கிங் பேட்’ நடிகர் மறைவுக்கு சக நடிகர் உருக்கமான பதிவு
