திருச்சி மாவட்டம் முசிறி அருகே சந்தப்பாளையத்தில் செங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து படித்துறை சுவர் இடிந்தது.
தருமபுரி மாவட்டம் அல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜா இவர் நாமக்கல்லில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு நாமக்கல் திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தார்.
சந்தப்பாளையம் அருகே வந்த போது குடிபோதையில் இருந்த அவர் சாலையிலிருந்து வேகத்தடையை கவனிக்காமல் வந்ததால் லாரி அவரது கட்டுப்பாட்டை இழந்து

சாலையோரத்தில் இருந்த வடகரை வாய்க்கால் கரையில் கவிழ்ந்தது.
இதில் முசிறி நகராட்சியில் சுமார் நான்கு லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வாய்க்கால் படித்துறையின் சுவர் இடிந்தது லாரி சுவரின் மீது விழுந்து தேங்கி நின்றதால் படித்துறையில்

குறித்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுனர் யுவராஜாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சந்தப்பாளையம் பொதுமக்கள் வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் சாலையில் வேகத்தடுப்பிற்காக பேரிகாடுகள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
