மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார்
கரூர் மாவட்டம் சர்க்கார்னர் நீலிமேட்டு தெருவை சேர்ந்தவர் ராமசாமி (43). கொத்தனார். குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் வேலை காரணமாக நேற்று திருச்சி வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று உறையூர் குழுமணி அருகே மது குடித்துவிட்டு மர்மமான முறையில் இருந்து கிடந்தார். இதுகுறித்த தகவரின் பேரில் உறையூர் போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக பொன்மலை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் அங்கே சோதனை நடத்தினர்.இப்போது கஞ்சா விற்றதாக பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராம் ( 20 )என்ற வாலிபரை கைது செய்தனர். பின்னர் பெயிலில் விடுவித்தனர். இடமிருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

