Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணக்கோலத்தில் வாக்களித்த மணமக்கள்

ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, நாமக்கல் மாவட்டத்தில் புதுமணத் தம்பதியர் மணக்கோலத்தில் வந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். நாமக்கல் அடுத்த என். கொசவம்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்த தீபிகா, திருப்பூரைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை மணமுடித்தார். திருமணம் முடிந்த கையோடு, மாலையுடன் மணக்கோலத்தில் என். கொசவம்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். இந்த நிகழ்வு குறித்து மணப்பெண் தீபிகா, தனது திருமண நாளில் வாக்களிப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், திருமண நிகழ்வுகள் முடிந்து திருப்பூர் செல்வதால், காலையிலேயே வந்து வாக்களித்ததாகவும் தெரிவித்தார். மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த மணமக்களை அங்கிருந்த பொதுமக்களும், தேர்தல் பணியாளர்களும் பாராட்டினர். இந்நிலையில் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் பல புதுமணத் தம்பதியர் இதேபோல் மணக்கோலத்தில் வந்து வாக்களித்து உற்சாகப்படுத்தினர்.

error: Content is protected !!