இயக்குநர் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக பரவிய செய்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஷாருக் கானிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் உலவும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளே என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
