2026ம் ஆண்டில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட 12 வெளிநாட்டுப் பயணங்களுக்கு சுமார் ரூ.75 கோடி செலவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவலின்படி, பிரதமரின் வெளிநாட்டு பயணங்களில் அதிகபட்ச செலவு நார்வே பயணத்திற்காக ரூ.17.46 கோடியாக பதிவாகியுள்ளது. அதேபோல், இஸ்ரேல் பயணத்திற்கு ரூ.11.92 கோடியும், சீஷெல்ஸ் பயணத்திற்கு ரூ.8.22 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
