Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வங்காரம் பேட்டை மேல ரஸ்தாவிலிருந்து கீழ செங்குந்தர் தெரு செல்லும் வழியில் உள்ள அன்னுக்குடி வாய்க்கால் மீதுள்ள பாலத்தின் ஒரு பக்க கைப் பிடி இடிந்துள்ளது. இந்த பாலத்தின் வழியே ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் ஏதாவது விபத்து நேரும் முன் பாலத்தின் கைப்பிடியைச் சீரமைக்க அப் பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப் பகுதி குடியிருப்பு வாசிகள் கூறுகையில் இந்த வாய்க்கால் பாலமே பழுதடைந்த நிலையில் தான் உள்ளது. பாலத்தின் பக்கவாட்டு கைப் பிடியும் இடிந்து சாய்ந்து விட்டது. இந்தப் பாலத்தை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனால் விபத்து நேரும் அபாயமுள்ளது. பாலமும் பழுதடைந்த நிலையில் உள்ளது. வாய்க்கால் பாலத்தை அகலப் படுத்தி புதிதாக கட்டுவதுடன், பாலத்தின் பக்க வாட்டில் கைப் பிடியை ஏற்படுத்த வேண்டும். இந்த வாய்க்காலையும் முறையாகத் தூர் வார வேண்டும். இதேப் போன்று குண்டும், குழியுமாக உள்ள கீழ செங்குந்தர் தெரு சாலையையும் தரமாக போட வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!