Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூரில் பஸ் விபத்து.. 25 பயணிகள் காயமுடன் தப்பினர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள குமாரமங்கலத்தில் இருந்து, இன்று காலை தஞ்சாவூருக்கு குமாரமங்கலம், கீழக்கொளத்தூர் கிராமத்தில் இருந்து தஞ்சாவூருக்கு அரசு டவுன் பஸ் 70 சென்றது. இப்பேருந்தில் ஓட்டுநர் நடத்துனர் மற்றும் 25 பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து
கள்ளூர் கிராமம், பதினாறு ஏரி அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வகையில் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. உயிர் சேதம் இல்லை. பேருந்தில் பயணம் செய்த

25 பயணிகள் சிறிது காயத்துடன் உயிர் தப்பினர், இவர்கள் அனைவரும் வாரணவாசி மற்றும் அரியலூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, அரியலூர் மருத்துவ கல்லுரி

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து திருமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!