Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பஸ்சில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த அரசு பஸ் டிரைவர் கைது…

திருக்காட்டுப்பள்ளி அருகே அலமேலுபுரம் பூண்டி குடியானத் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் சக்தி தேவி ( 18 ).இவர் கல்லூரி சென்று விட்டு திருக்காட்டுப்பள்ளி பஸ் ஸ்டாண்டில் ஊருக்கு செல்வதற்காக அரசு பஸ்ஸில் ஏறி நின்றுக் கொண்டிருந்தார்.அந்த பஸ்ஸில் ஓட்டுநராக பணிபுரியும் திருவையாறு மேலவட்டம் வடக்கு தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் பரமானந்தம் (43) அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டு தனது சீட்டில் அமரச் சென்றுள்ளார். இது குறித்து கேட்டதற்கு உன்னால் என்ன செய்ய முடியும். எது வேணாலும் செய்து கொள் என்று மிரட்டி உள்ளார். இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் சக்தி தேவி புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஓட்டுநர் பரமானந்தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!