பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 நபர்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். நேற்று (அக்.2) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், எச்சரிக்கையையும் மீறி அத்துமீறி நுழைய முயன்ற ஊடுருவல்காரர்கள் மீது நடத்திய தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை தொடர்ந்து எல்லை பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு, உயிரிழந்த நபர்களின் அடையாளங்கள் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊடுருவல் முயற்சி: 2 பேரை சுட்டுக்கொன்ற BSF படை வீரர்கள்
