Skip to content
Home » பஸ் படிக்கட்டுகளில் பயணம்… போக்குவரத்து கழகம் புதிய நடவடிக்கை..

பஸ் படிக்கட்டுகளில் பயணம்… போக்குவரத்து கழகம் புதிய நடவடிக்கை..

மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, படியில் தொங்கிகொண்டு பயணம் செய்வதை தடுக்கும் வகையில், முதற்கட்டமாக 200 பேருந்துகளுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவதை தவிர்க்க படிக்கட்டுகளின் முன், பின் உள்ள ஜன்னல்களில் கண்ணாடிகள் நிரந்தரமாக பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் முன் மற்றும் பின் பக்கங்களின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு நிரந்தரமாக கண்ணாடி பொருத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அதுபோல், ஓடும் பேருந்துகளில் இருந்து இறங்க முயற்சிக்கும் பயணிகளை நடத்துநர் எச்சரிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து ஆபத்தான முறையில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் பேருந்தை சாலை ஓரம் நிறுத்தி மாணவர்கள் பேருந்தின் உள்ளே வந்த பிறகு பேருந்தை இயக்க வேண்டும்.

பஸ்  நிறுத்தங்களிலிருந்து பேருந்தை நகர்த்தும் முன் ஓட்டுனர் பின்பார்வை கண்ணாடி மூலம் பயணிகள் யாராவது ஓடி வந்து ஏற முயற்சிக்கின்றார்களா என கவனித்தும் மற்றும் நடத்துனரும் படிக்கட்டில் ஏற முயல்பவர்களை கண்காணித்தும் விசில் அடித்து நிறுத்தி ஏற்றி பேருந்தை இயக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!