சென்னை எழும்பூரில் கடந்த 2013-ல் மதுபோதையில் காரை ஓட்டி சிறுவன் உயிரிழக்கக் காரணமான வழக்கில், தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மாதம் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தற்போது தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் முனிராஜ் என்ற சிறுவன் உயிரிழந்தான்; மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
