Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்டுகள் என 5 முனை போட்டி நிலவி வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணிவரை பதிவான வாக்குகள் சதவீதம் வெளியாகியுள்ளது. அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 15.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல், தாராபுரத்தில் 17.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மதுராந்தகம், தாராபுரத்தை போன்று புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி காலை 9 மணி நிலவரப்படி தட்டாஞ்சாவடியில் 19.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 9ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!