விரைவில் இடைத்தேர்தல்..ஸ்டாலின் கனவை கலைக்கும் எடப்பாடி

684
Spread the love

அமைச்சர்கள் தங்கமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று டில்லி புறப்பட்டு சென்றனர். விமானநிலையதில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் அமி்த்ஷாவை சந்திக்க வாய்ப்பு உண்டா? என கேட்டதற்கு, மாநில பிரதிநிதிகள் மத்திய பிரதிநிதிகளை சந்திப்பு இயல்பு தானே? என நக்கலாக குறிப்பிட்டார். ஏப்ரல் இறுதியில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் அமைச்சர்கள் டில்லிப்பயணம் ஏன்? என கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் காலியாகியிருக்கும் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் இடைத்தேர்தல்களை நடத்தி அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான இமேஜை உயர்த்திக்கொள்ள அதிமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும், எனவே 2 தொகுதிகளுக்கும்தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யுமாறு அதிமுக அமைச்சர்கள் சென்று இருப்பதாக கூறப்பட்டது. அதற்கு தகுந்தாற்போல் நேற்று மாலை சென்னை திருவொற்றியூர், வேலூர் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக  இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்றும்  பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கும் மேல் இருப்பதால் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அதிவிரைவில் அதாவது ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியின்படி விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

LEAVE A REPLY