Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விஜய் டிவி, சன் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற பொழுது போக்கு சேன்ல்கள், கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, டிஸ்கவரி போன்ற சிறுவர்கள் பார்க்க கூடிய கட்டண சேனல்களின் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என சேனல் முதலாளிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இதனால் சேனல் முதலாளிகள் தங்களுடைய சேனல் கட்டணங்களை பன்மடங்காக உயர்த்த வாய்ப்புள்ளது எனவும் மார்ச் மாதம் முதல் கேபிள் டிவி மாத கட்டணம் 500 ரூபாய் வரை உயரக்கூடும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள கட்டண உயர்வு அனுமதியை உடனடியாக ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் விஷ்ணுவர்தன் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் 200 க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பங்கேற்று கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!