தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழ்நாடு 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வந்ததில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இது தேர்தல் முடியும்வரை மாநிலத்தில் அமலில் இருக்கும்.
அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. அன்று முதல் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இது தேர்தல் முடியும் வரை அமலில் இருக்கும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, சாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்வது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது உள்ளிட்டவை சட்டத்திற்கு விரோதமானது. அதேபோல், தனி நபர் பணம் கொண்டு செல்வது உள்ளிட்டவற்றுக்கும் கட்டுப்பாடுகள் இருக்கும்.
வாக்காளர்கள் எந்தவித அழுத்தம், தாக்கத்திற்கும் உள்ளாகாமல் வாக்குச் செலுத்த தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு முந்தைய 48 மணி நேரத்தை அமைதி நேரமாக வைத்துள்ளது. இந்த 48 மணி நேரத்திற்கு முன்பு, வாக்கு சேகரிப்பது, பிரச்சாரம் மேற்கொள்வது, விளம்பரங்கள் செய்வது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைதி காலம், தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணி முதல் தொடங்குகிறது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவு பெறறுகிறது. .. இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்! காட்டி வருகின்றனர்.
தொடர்ந்து 23ம் தேதி காலை 7 மணி முதல் 234 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும். வாக்குச்சாவடிக்குள், வாக்காளர்கள் செல்போன்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே வாக்குச் சாவடிக்கு வெளியே செல்போன்களை வைக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதேபோல், மாற்றுத் திறனாளிகள் வாக்குச் செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும், வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.தொடர்ந்து 23ஆம் தேதி காலை 7 மணி முதல் 234 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும். வாக்குச்சாவடிக்குள், வாக்காளர்கள் செல்போன்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே வாக்குச் சாவடிக்கு வெளியே செல்போன்களை வைக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதேபோல், மாற்றுத் திறனாளிகள் வாக்குச் செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும், வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வாக்குப் பெட்டிகள் பல அடுக்கு பாதுகாப்புடன், முழு கண்காணிப்பு வலையத்தில் வைக்கப்பட்டிருக்கும். மே 4ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து அடுத்து 5 வருடங்கள் நம்மையும், மாநிலத்தையும் யார் நிர்வகிக்க போகிறார்கள் என்பது தெரியவரும்.
