திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தஞ்சாவூர் – வேளாங்கண்ணி கார் மற்றும் நாகை – அம்மையப்பன் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
