Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜார்கண்டில் கார்-லாரி மீது மோதி விபத்து.. 7 பேர் பரிதாப பலி

ஜார்கண்டில் கார்-லாரி மீது மோதி விபத்து.. 7 பேர் பரிதாப பலி

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர்-பொகாரோ சாலையில், நள்ளிரவில் கார் ஒன்று லாரி மீது மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 8 பேர் பயணித்தனர். லாரி பகுதியில் உள்ள சாலையில் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் எதிரே வந்த லாரி மீது கார் மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு நபர் உடனடியாக மீட்கப்பட்டு, ராம்கர் சதர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜ்ரப்பா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மரங்மர்ச்சா பகுதியைச் சேர்ந்தவர்கள் என ராம்கர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!