கர்நாடக துமகூரு புறநகர் தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ் கவுடாவின் மகள் ஐஸ்வர்யா, அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள லட்சுமி நரசிம்மசாமி கோயிலுக்கு சென்றார். விஐபி வரிசையில் நுழைய முயன்றபோது, அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவிதா தடுத்ததாக கூறப்படுகிறது. சாதாரண உடையில் கருவறை அருகே சென்ற இன்ஸ்பெக்டர் குறித்து ஐஸ்வர்யா கேள்வி எழுப்பியபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஐஸ்வர்யா, சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், ஐஸ்வர்யா மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
