Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவலரை தாக்கிய வழக்கு!தஞ்சையில் 2 பேர் பிணையில் விடுதலை

காவலரை தாக்கிய வழக்கு! தஞ்சையில் 2 பேர் பிணையில் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்து, பதிலுக்கு அடித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் மற்றும் அய்யப்பன் இருவரும் ஒரு நாள் நீதிமன்ற காவலுக்கு பின் பிணையில் விடுதலை .

நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலில் ஈடுபட்ட போது. இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கிய நிலையில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுக்கு பின் நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டு இருவரும் புதுககோடடை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் பிணையில் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என நீதிபதியிடம் தெரிவித்ததாக காவல் துறை தெரிவித்தனர்.

பின்னர் இருவரும் ஒரு நாள் நீதிமன்ற காவலுக்கு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு காவல் துறையினர் உரிய அறிவுரை கூறினர். இனி அது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எடுத்துரைத்தனர்.

error: Content is protected !!