Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

7ம் வகுப்பு மாணவனை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

கரூர், காந்திகிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆங்கிலப் பள்ளியில் கரூர் பஞ்சமாதேவி அடுத்த சந்தன காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பானுமதி என்பவரின் ஒரே மகனான (விஜயலட்சுமி வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி) 7ஆம் வகுப்பு படித்து வரும் (12 வயது) மாணவனை தாமதமாக வந்ததாக கூறி உடற்கல்வி ஆசிரியர் மணி என்பவர் நேற்று பிரம்பால் அடித்த விவகாரம்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் தாந்தோணிமலை காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் பள்ளியில் வைத்து விசாரணை நடத்தினர்.

மேலும், பள்ளிக் கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி மாணவனை தாக்கிய விவகாரம் குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி மாவட்ட குழந்தைகள் நல அலகுக்கு அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக தகவல் அளித்திருந்தனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், பள்ளியின் தாளாளர் கார்த்திகா லட்சுமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் ஆகிய இருவர் மீதும் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!