Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காளியம்மன் கோவில் உண்டியல் கொள்ளை.. சிசிடிவி பதிவில் சிக்கிய 2 பேர்..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் வாசலில் உள்ள உண்டியலின் பூட்டை இரண்டு மர்ம நபர்கள்
இரும்பு கம்பியால் நள்ளிரவு 2.30 மணிக்கு உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் வரவே மர்மநபர்கள் உண்டியலில் உள்ள பாதி பணத்தை அள்ளிக்கொண்டு அருகில் உள்ள இருட்டில் பதுங்கி ஓட்டம் பிடித்தனர். திருடர்கள் பதுங்கிய இடத்தில் ஏராளமான சில்லறை காசுகளை திருடர்கள் விட்டுச் சென்றுள்ளனர். இச் சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் கோயில் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கோயிலில் உள்ள இந்த உண்டியல் ஐந்தாவது முறையாக உடைக்கப்பட்டு திருட்டு நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!