அன்புமணிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் வாபஸ் பெற்றுள்ளார். பாமக தலைவராக தன்னை அறிவிக்கக் கோரியும், பாமக கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், தங்களுக்குள்ளான பிரச்னையை சுமூகமாக தீர்த்துக்கொண்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று வழக்கை முடித்துவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
