தமிழகத்தில் இன்று (அக்.7) கோவை, தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், மயிலாடுதுறை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
