பழனியில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் 2 பேருக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சார்பதிவாளர் அலுவலக இளைநிலை உதவியாளர் சிவசங்கரி மற்றும் வழக்கறிஞர் சிவக்குமார் ஆகியோரும் இதில் அடங்குவர். இந்த மோசடி வழக்கில் மேலும் சிலர் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு: மேலும் 2 பேர் கைது
