Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செங்கல்பட்டு- அரசு பஸ் கவிழ்ந்து விபத்து-உயிர்தப்பிய 25 பயணிகள்

கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை வந்துக்கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் வளைவில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் ரோந்து போலீசார் பேருந்தில் பயணம் மேற்கொண்டு வந்த 25 பயணிகள் மாற்று பேருந்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு புறவழிசாலையில் ஏற்பட்டுள்ள நெரிசலை போலீசார் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து விபத்தில் 25 பயணிகள் சிறு காயமின்றி உயிர் தப்பினர்.

error: Content is protected !!