Skip to content
Home » சென்னை மெரினாவில் 76வது சுதந்திர தின விழா ஒத்திகை…

சென்னை மெரினாவில் 76வது சுதந்திர தின விழா ஒத்திகை…

  • by Senthil

நாட்டின் 76 வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைக்க இருக்கிறார். சுதந்திர தின விழாவை ஒட்டி காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் இதற்காக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும்.

tn

இந்நிலையில் 76 வது சுதந்திர தின விழா ஒத்திகை ஆகஸ்ட் 4 ,10, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.  76 ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் விழாவில் தகைசால் தமிழர்  விருது , ஏபிஜே அப்துல் கலாம் விருது,  துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுகள் வழங்கப்படுவது போல ஒத்திகை நடத்தப்படுகிறது. இதற்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!