Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல்  வாரத்தில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  தேர்தலை நடத்த அனைத்து பணி்களையும்  செய்து முடித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.  ஏற்கனவே  தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வந்து,  தமிழக தேர்தல் அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.

இந்த நிலையில் இறுதிக்கட்ட ஆலோசனைக்காக  இந்திய  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 23ம் தேதி சென்னை வருகிறார்.  அவர்  சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாகு மற்றும் தலைமை செயலாளர்,  காவல் துறை உயர் அதிகாரிகளுடன்  ஆய்வு  மேற்கொள்கிறார்.

இதுபோல மற்ற மாநிலங்களுக்கும் ராஜீவ் குமார் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். மார்ச் 13 ம் தேதி வரை அவரது  ஆய்வு பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.  மார்ச் முதல்வாரத்தில்  தேர்தல் தேதியை அறிவித்து விட்டு   ஆய்வு கூட்டத்தை  தொடர்வாரா, அல்லது  மார்ச் 13க்கு பிறகு  தேர்தல் தேதியை அறிவிப்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!