சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில், வடகிழக்கு பருவமழையும் தொடங்க உள்ளதால், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்கிறார் முக்கிய நோக்கம்.
மின்னகம் மின்சார நுகர்வோர் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தின் செயல்பாடு குறித்தும், பொதுமக்களிடமிருந்து வரும் மின்வெட்டு புகார்கள் மீதான உடனடி நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்கிறார்.
- தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் மின் தடையால் பொதுமக்களுக்கும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
வலுவான மின் கட்டமைப்பு, சீரான மின் விநியோகம் சிறந்த நுகர்வோர் சேவை ஆகியவற்றை மையப்படுத்தி முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்*
