Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பனையூர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக கடந்த 10ம் தேதி விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதேவேளை, சட்டசபையில் 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உத்தரவிட்டார். அந்த வகையில் தமிழக சட்டசபையில் நாளை தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!