தமிழக அரசின் திட்டமான ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை’ முதல்வர் விஜய் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முறைப்படி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக அங்குப் பிறந்த 30 பச்சிளங்குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரங்களை அவர் நேரில் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.
தாய் மாமன் தங்கம் மோதிரம் திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்
