Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய் சிறப்பாக ஆட்சி செய்வார்.. நடிகர் சிவகார்த்திகேயன்

முதல்வர் விஜய் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார் அதேபோல் ஆட்சியும் இருக்கும் என நம்புகிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் மாநாடு கமல்ஹாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர் வட பூஜைக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய சிவகார்த்திகேயன், “சேயோன் இன்று தொடங்குகிறது சிறப்பாக தொடங்கியுள்ளது. அதற்கான உழைப்பை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். மதுரைக்கு வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டதும் நம்ம ஊர் பக்கம் வந்து நம்ம ஊர் தொடர்பான கதையை தாய் கிழவி டைரக்டரோடு செயல்படுவது இன்னும் சிறப்பு. மதுரைக்கு என்ற ஒரு பவர் உள்ளது, அந்த பவர் குறையாமல் படம் இருக்கும்.இந்தப் படத்தை விருமாண்டி படம் போல் எடுக்க வேண்டும் என நினைக்கவில்லை, அதில் எப்படி எல்லோருக்கும் பிடிக்கும் கதை இருந்ததோ அதேபோல் இருக்கும்

எங்களுடைய துறையில் இருந்து ஒரு முதல்வர் அதுவே ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. முதல் நாள் விஜய் வெற்றி பெற்ற பிறகு போன் செய்து பாராட்டினேன், அதே அமைதியில் என்னிடம் நல்லா இருக்கீங்களா என்று கேட்டு என்னுடைய வாழ்த்து பெற்றுக் கொண்டார். அவர் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார், இதுவும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன்” என பேசினார்.

error: Content is protected !!