மதுரையில் சாலைவலம் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, தவெக தொண்டர்கள் நடிகர் அஜித்குமாருடன் அவர் இருக்கும் புகைப்படத்தை வழங்கினர். மதுரையில் இன்று (செப்.28) தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, காந்தி மியூசியம் சென்ற முதலமைச்சர் விஜய் தற்போது மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். அவரை திரளான ரசிகர்கள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் முதலமைச்சர் விஜய் சென்னை திரும்புகிறார்.
அஜித்குமாருடன் முதலமைச்சர் விஜய்.. புகைப்படம் வழங்கிய தொண்டர்கள்
