Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5ஆண்டு சிறை…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வாணாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் கர்ணன் (29). சமையல் வேலை செய்து வந்தார். இவர் மனநலன் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு கடந்த 2021ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்ணனை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து கர்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!