Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலைஞர் 100 விழா….. சென்னையில் 6ம் தேதி கொண்டாட்டம்….தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

அதன்படி, தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும்விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100’ விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் கடந்த நவம்பர் மாதம் நேரில் சந்தித்து அவரது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அவருக்கு ‘கலைஞர் 100’ விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கினர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!