சிஐடியூ மாநில துணைப் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் பணியிடை நீக்கம்: கரூரில் டாஸ்மார்க் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் தொழில் பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மார்க் மேலாளர் அலுவலகம் முன்பு மாவட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மார்க் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தமைக்காக கோயம்புத்தூரில் பணியாற்றி வரும் சிஐடியூ மாநில அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணனை டாஸ்மார்க் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், டாஸ்மார்க் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து முழக்கங்கள் எழுப்பினர். இதில் citu சங்க நிர்வாகிகள் மற்றும் டாஸ்மார்க் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
