Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார். அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி விமர்சனம்

விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார்.அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும்

பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஊடகத்திற்கும் பதில் சொல்வதில்லை, பேரவையிலும் பதில் சொல்வதில்லை..பழி போடுவதை வழக்கமாக அரசு வைத்துள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இன்று சட்டப்பேரவையில் பேசி பேரவையையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றியுள்ளார் முதலமைச்சர் விஜய் என குற்றம் சாட்டி பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் அவர் கூறியதாவது,

சட்டமன்றத்தை சினிமா தியேட்டர் போல ஆக்கிட்டாங்க.. இதெல்லாம் சட்டசபை பாக்காதது. முழுக்க முழுக்க ரீல்ஸ்க்காகவும், டிரெண்டுக்காகவுமே முதல்-அமைச்சர் பேசுகிறார் இன்று விசில் அடிக்கிறார்கள், விரைவில் அமைச்சர்கள் பாடல் போட்டு நடனமாடுவார்கள்.

பேரவையில் இன்றைக்கு முதல்-அமைச்சர் விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார். அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும். ஸ்கிரிப்ட்டை அவர் பேசி முடிக்கும்வரை யாரும் கட் சொல்ல கூடாது, சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி இருக்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தவர் எப்படி இருப்பாரோ… அது போல் முதல்-அமைச்சரின் உரை அமைந்துள்ளது. தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளை கேட்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறீர்கள்.. முதல்-அமைச்சர் உங்களுக்கும் பதில் சொல்ல மாட்டாங்கிறார் – அவையில் எங்களுக்கும் பதில் சொல்ல மாட்டேங்கிறார். என்று அவர் கூறினார்.

2021ல் கலைஞர் நூற்றாண்டு படத்திறப்பின்போது சட்டமன்றத்தில் இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டதாக முதல்-அமைச்சர் விஜய் குறிப்பிட்டதற்கு பதில் அளித்த உதயநிதி, “தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறையும், தேசிய கீதம் 2 முறையும் பாடப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலில்லை. குடியரசுத் தலைவர் பேரவைக்கு வந்தால் அங்கு தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது புரோட்டோகால். ஒரு புரோட்டோகால் கூட முதல்-அமைச்சருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது. குடியரசுத் தலைவருக்கு தனி புரோட்டோகால் உள்ளது. அது கவர்னருக்கு கிடையாது” என்று கூறினார்.

error: Content is protected !!