வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், இதனால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
