தமிழகத்தில் சர்க்கரை விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் 50 கிலோ சர்க்கரை மூட்டை ரூ.2,150-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.3,500 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் சில்லறை விற்பனையில் ரூ.68 ஆக அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு கடைகளில் டீ, காபி விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி விலை உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
