Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் குடிமைப்பணி தேர்வு! 646 பேர் பங்கேற்பு

சென்னையில் குடிமைப்பணி தேர்வு! 646 பேர் பங்கேற்பு

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதன்மைத் தேர்வு இன்று தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் 646 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். விண்ணப்பித்திருந்த 651 பேரில் 5 பேர் தேர்வுக்கு வரவில்லை. குடிமைப்பணி முதன்மைத் தேர்வு இன்று (21-ம் தேதி) முதல் 23-ம் தேதி வரையிலும், 29-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. தேர்வுகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறுகின்றன.

சென்னையில் தேர்வு நடைபெறும் மையங்களில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒரு கண்காணிப்பு அலுவலரும், மாநில அரசின் இந்திய ஆட்சிப்பணி நிலையில் உள்ள உயர் அலுவலர் ஒருவரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வர்களின் வருகைப் பதிவின்போது ‘Face Authentication App’ மூலம் நுழைவுச்சீட்டில் உள்ள புகைப்படத்தையும், தேர்வெழுத வந்த தேர்வர்களின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் நடைபெற்ற குடிமைப்பணி முதன்மைத் தேர்வு எவ்வித புகாருக்கும் இடமின்றி நடைபெற்று வருவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!