திருச்சி கருமண்டம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (35). இவர் மன்னார்புரம் கல்லுக்குழி வடக்கு தெருவில் போட்டோ ஸ்டூடியோவில் சிஸ்டம் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். ஸ்டூடியோவின் பின்புறம் திருக்குமார் என்பவரின் வீடு உள்ளது.
சிவசங்கர் தனது முதலாளிக்கு சொந்தமான காரை ஸ்டுடியோவின் முன்புறத்தில் நிறுத்தியிருந்தார். அது திருக்குமாருக்கு இடையூறாக இருந்தது. இதன் காரணமாக கடந்த 20- ந்தேதி திருக்குமார் அங்கு வந்து, கார் நிறுத்தப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பி, காருக்குத் தீ வைப்பதாகப் சிவசங்கரை மிரட்டி உள்ளார். அதன் பிறகு, திருக்குமாரின் தூண்டுதலின் பேரில் அடையாளம் தெரியாத 4 நபர்கள் அங்கு வந்து, கார் நிறுத்தப்பட்டது குறித்து சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர்களுக்குள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சிவசங்கரை தகாத வார்த்தைகளால் திட்டி, கையாலும் இரும்புக் கம்பியாலும் தாக்கி உள்ளனர். இதையடுத்து சிவகுமார் உடன் வேலை பார்க்கும் கோகுலையும் தாக்கியதோடு, ஸ்டூடியோவில் உள்ள சிபியு-2, கேமரா ஸ்டாண்ட், கீபோர்டு மற்றும் ஹார்டு டிஸ்க்-2 ஆகியவற்றையும் சேதப்படுத்தி உள்ளனர். அந்தப் பொருட்களின் மதிப்பு மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும். இதில், சிவக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோகுலுக்கும் சிறிய காயம் ஏற்பட்டது. இது குறித்து சிவக்குமார் கன்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் அதன்
பேரில் போலீசார் திருக்குமார் மற்றும் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
