Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி… திருச்சி க்ரைம்

அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி... திருச்சி க்ரைம்

அரசு வேலை வாங்கி தருவதாக … பல லட்சம் மோசடி

திருச்சி கே.கே. நகர் இந்தியன் பேங்க் காலனி சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜெசிந்தா லிவேனியா (62). இவர் வேளாண்மைத் துறையில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு மேற்பார்வையாளர் ஆவார். இவருக்கு சாகுல் அகமது என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சாகுல் அகமது, ஜெசிந்தா லிவேனியா மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தார். அவரது வார்த்தைகளை நம்பிய அவர் கடந்த 2020 முதல் 2023 வரை பல்வேறு தவணைகளாக சாகுல் அகமது கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.3 லட்சத்தை அனுப்பி உள்ளார். தொகையைப் பெற்ற பிறகு, சாகுல் அகமது எந்த வேலையையும் வாங்கித் தரவும் இல்லை, தொகையைத் திருப்பிக் கொடுக்கவும் இல்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது இப்போது தருகிறேன் அப்புறம் தருகிறேன் என ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ஜெசிந்தா லிவேனியா கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சாகுல் அகமது அவரது மனைவி மேரி, திலகா, தயாநிதி ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கஞ்சா, போதை மாத்திரைகள் புகையிலை விற்ற 6 பேர் கைது

திருச்சி பெரிய கடை வீதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த இ.பி. ரோடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 2000 போதை மாத்திரைகள் ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் மாம்பழச்சாலை மேம்பாலம் அருகே போதை மாத்திரைகள் விற்றதாக திருவானைக்காவல் தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ( 25 ) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புகையிலை பொருட்கள்

கருமண்டபம் பகுதியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஹரிகரன் (வயது 24 )மணப்பாறையை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (32) இளையராஜா ( 33 )ஆகிய மூன்று பேரை செசன்ஸ் கோர்ட் போலீசார் கைது செய்தனர். இதேபோல் பாரதி நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த சடையாண்டி (44 )என்பவரை எடமடைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்.
ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர் . அப்போது ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி மனைவி மாலதி (62) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த முதியவர்

திருச்சி ஆக.21-

திருச்சி கே கே நகர் குறிஞ்சி நகர் பகுதியில் சேர்ந்தவர் தாவூத் செரிப் (வயது 75). இவருக்கு திருமணம் ஆகி மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ( 20-ந்தேதி) அவர் வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கே.கே. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!